Published : 18,Aug 2020 09:45 AM

ஆந்திரா டூ சென்னை.. வெங்காய வேனில் கொண்டுவரப்பட்ட 400 கிலோ கஞ்சா: மூவர் கைது!

Three-arrested-for-smuggling-400-kg-of-cannabis-from-Andhra-Pradesh-to-Chennai


ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வெங்காயம் ஏற்றி சென்ற வேனில் 400 கிலோ கஞ்சா கடத்திய 3 பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

image
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு போதை பொருட்கள் கடத்தி வருவது அதிகரித்துள்ளதை அடுத்து சென்னை பெருநகர காவல் துறையினர், சென்னையை அடுத்த செங்குன்றம் மொண்டியம்மன் நகரில் சோதனைச்சாவடி அமைத்து நாள்தோறும் சென்னை காவல் ஆய்வாளர்கள் ஒவ்வொருவர் தலைமையிலும் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் மாதவரம் காவல் ஆய்வாளர் கோபிநாத் தலைமையிலான காவல் துறையினர் நேற்றிரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, அதிகாலையில், வெங்காய மூட்டைகள் ஏற்றி வந்த வேன் ஒன்றை மடக்கி சோதனையிட்ட போது, அதில் வெங்காய மூட்டைகளுக்கு அடியில் 13 மூட்டைகளில் 400 கிலோ கஞ்சா இருப்பதை கண்டறிந்தனர்.

image
இதனையடுத்து, வேன் ஓட்டுநர் அருண் பாண்டியன் என்பவரிடம் மேற்கொண்ட விசாரணையில், ஆந்திர மாநிலம் கூடூரில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தி வந்ததாகவும், வேனின் பின்னால் காரில் இருவர் வருவதாகவும் தெரிவித்த தகவலையடுத்து, அந்த காரை மடக்கி காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

image
அதில் மதுரையை சேர்ந்த அருண் பாண்டியன், விக்னேஷ் மற்றும் கால் டாக்சி ஓட்டுநர் சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த பாபு என்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து 400 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல் துறையினர், 3 பேரையும் கைது செய்து செங்குன்றம் காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்