ஃபேஸ்புக்குடன் கைகோர்த்த இந்திய தேர்தல் ஆணையம்
வாக்காளர் அடையாள அட்டைக்கான ஆள்சேர்ப்பு முகாமை நடத்த உள்ள இந்திய தேர்தல் ஆணையம் ஃபேஸ்புக்குடன் கைகோர்த்துள்ளது.
வாக்காளர் அடையாள அட்டையை பதிவு செய்வதற்கான நினைவூட்டலுக்காக ஃபேஸ்புக்குடன் தேர்தல் ஆணையம் கைகோர்த்துள்ளது. இதன்படி, 18 வயது பூர்த்தியடைந்தவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைக்காக பெயர் சேர்த்தல் குறித்து நினைவூட்டலை ஃபேஸ்புக் வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் 4ம் தேதி வரை வழங்கும். அந்த நினைவூட்டலை பயனாளர்கள் க்ளிக் செய்யும் நிலையில், அது தேர்தல் ஆணையத்தின் புதிய வாக்காளர் பதிவு பக்கத்துக்கு இட்டுச் செல்லும். இந்த நினைவூட்டல் தமிழ், இந்தி, தெலுங்கு, குஜராத்தி, மராத்தி உள்ளிட்ட 13 இந்திய மொழிகளில் ஃபேஸ்புக் பயனாளர்களுக்குச் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் முடிவடைந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முதல்முறையாக தேர்தல் ஆணையம் ஃபேஸ்புக்குடன் கைகோர்த்தது.
Loading More post
கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்ட மாதவனின் ‘ராக்கெட்ரி’ - பாராட்டிய பிரபலங்கள்!
ஓராண்டு சிறை தண்டனை: இன்று சரணடைகிறார் நவ்ஜோத் சிங் சித்து
`சட்ட போராட்டம் தொடரும்’-கனகசபை மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்ததற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு
இந்த சீசனில் இதுவே கடைசிப் போட்டி - இன்று ராஜஸ்தானுடன் மோதும் சிஎஸ்கே
பழைய ஃபார்மிற்கு திரும்பிய விராட் கோலி - குஜராத்தை வீழ்த்தியது பெங்களூரு