அப்போ தோனி.. இப்போ கோலி... சீண்டும் புனே அணி ஓனர்!

அப்போ தோனி.. இப்போ கோலி... சீண்டும் புனே அணி ஓனர்!
அப்போ தோனி.. இப்போ கோலி... சீண்டும் புனே அணி ஓனர்!

இந்திய அணியின் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே பதவி விலகல் விவகாரம் தொடர்பாக ஐபிஎல் தொடரில் பங்கேற்ற புனே அணியின் உரிமையாளர் ஹர்ஷ் கோயங்கா கேப்டன் விராத் கோலியை வம்பிழுக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.

சாம்பியன்ஸ் கோப்பை தொடர் தோல்விக்குப் பின்னர் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை கும்ப்ளே ராஜினாமா செய்தார். இதையடுத்து பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள புனே அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ஹர்ஷ் கோயங்கா, இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பியுங்கள். அதற்கான தகுதிகள்: அணியின் பயணத்தை ஒருங்கிணைத்தல், வீரர்கள் தங்குவதற்காக ஹோட்டல் அறைகளை புக் செய்வது, பிசிசிஐ நிர்வாகத்துக்கும், இந்திய அணியின் கேப்டனுக்கு உண்மையாக இருத்தல் வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். அனில் கும்ப்ளே பதவி விலக விராத் கோலியுடனான கருத்து வேறுபாடுகளே காரணம் என்று கூறப்பட்டு வந்த நிலையில், கோலியை வம்பிழுக்கும் வகையில் கோயங்கா ட்விட்டரில் இவ்வாறு பதிவிட்டுள்ளார். சமீபத்தில் முடிந்த ஐபிஎல் தொடரில் புனே வீரர் தோனியின் ஃபார்ம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி ஹோயங்கா ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அவரது, இந்த பதிவுகளுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் பதிலடி கொடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது. 
 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com