[X] Close

அடுத்த படத்திலும் சல்மான் கானுடன் இணையும் டியூப்லைட் கோஷ்டி!

Tubelight-director-joins-again-with-Salman-Khan

டியூப் லைட் இயக்குனர் கபீர் கானுடன் சல்மான் கான் அடுத்த படத்திலும் கைகோர்க்க உள்ளார். மேலும் அப்படத்தில் சல்மான் கான் 75 வயது முதியவராக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. 


Advertisement

ரமலான் விருந்தாக சல்மான் கான் நடிப்பில் வெளியாகி உள்ள டியூப் லைட் எதிர்பார்த்தப்படி ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கவில்லை. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் வெளியாகி 4 நாட்கள் ஆகியும் இன்னும் 100 கோடி வசூலை எட்டவில்லை. கபீர் கான் இயக்கத்தில் இப்படம் வெளிவந்திருந்தது. படம் குறித்த எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தாலும் அடுத்த படத்திலும் சல்மான் கான் மீண்டும் கபீர் கான் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப்படத்தில் சல்மான் கான் 75 வயது முதியவராக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இதுகுறித்து சல்மான் கான் தரப்பில், "டியூப் லைட் படம் குறித்து வரும் விமர்சனங்கள் சல்மான் கானை பெரிதும் பாதிக்கவில்லை. டியூட் லைட் படப்பிடிப்பின் போதே, அடுத்தப்படம் கபீர் கானுடன் தான் என சல்மான் கான் முடிவெடுத்துவிட்டார். எனவே டியூட் லைட் படத்தின் விமர்சனம் புதிதாக வர உள படத்தை எந்தவிதத்திலும் பாதிக்காது. நிச்சயம் அடுத்த படத்தில் கபூர் கானுடன் சல்மான் கான் கைகோர்பார்" என தெரிவித்த்துள்ளனர். 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close