Published : 17,Aug 2020 12:14 PM

“விரைவில் குணமடையுங்கள் பாலு சார்...” - ரஜினிகாந்த்

rajinikanth-wishes-to-s-p-balasubramaniyam

கொரோனாவிலிருந்து எஸ்.பி.பாலசுப்ரமணியம் விரைவில் குணமடைய வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “50 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் உள்ள பல மொழிகளில் கோடி கோடி மக்களை தனது இனிமையான குரலால் மகிழ்வித்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார். அவர் அபாய கட்டத்தை தாண்டியுள்ளதாக வந்த செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது.

இருந்தாலும் தீவிர சிகிச்சையில் உள்ளார். அவர் விரைவில் குணமடைய வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்