பிறப்பிடம் கண்டறிய முடியாத நோய் பாதிப்பு அதிகரிப்பால் இரு மாநில எல்லையான குமுளி, தேக்கடியில் முழு ஊரடங்கு.
தமிழக கேரள எல்லையை இணைக்கும் இடுக்கி மாவட்டம் குமுளி, தேக்கடியில் பிறப்பிடம் கண்டறியப்படாத நோயாளிகள் அதிகரித்து வருவதாலும் இரு மாநில எல்லையை இணைக்கும் பகுதியான குமுளி, தேக்கடி முழுவதுமாக மூடப்பட்டுள்ள நிலையில் முழுஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.
இதனால் நகர்பகுதிகள் முழுவதும் வெறிச்சோடிக் கிடந்தன. தமிழக கேரள எல்லையை இணைக்கும் இடுக்கி மாவட்டத்தில் தொடர்புகளாலும், கொரோனா நோய் தொற்றின் பிறப்பிடம் காண முடியாத நோயாளிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர் தற்போது இடுக்கியில் 307 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை 1,248 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இரு மாநில இணைப்பு பகுதிகளான குமுளி, தேக்கடி பகுதிகளில் தற்போது 25க்கும் அதிமானோருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் பிறப்பிடம் கண்டறியப்படாதோர் 10க்கும் அதிகமானோர் உள்ளனர்.
இதையடுத்து குமுளி தேக்கடி நகர்பகுதியை உள்ளடக்கிய குமுளி ஊராட்சி பகுதிகள் பாதுகாப்பு மண்டலங்களுக்குள் கொண்டுவரப்பட்டு முழுவதுமாக மூடப்பட்டது, மருந்துக்கடைகள், காய்கறி, மளிகைக் கடைகள் திறக்கப்பட்டிருந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அதிகம் புழங்கும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. போக்குவரத்து முழுவதுமாக முடக்கப்பட்டது. இதையடுத்து குமுளி, தேக்கடி நகர்பகுதிகள் முழுவதும் வெறிச்சோடிக் கிடந்தன.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!