[X] Close

தோனியின் மறக்க முடியாத வெற்றிகள் - ஒரு பார்வை..!

விளையாட்டு

Team-India---s-top-5-victories-under-MS-Dhoni

2004-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையே நடைபெற்ற ஒருநாள் போட்டியில் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார் தோனி. நீளமான முடி, கட்டுமஸ்தான உடல் என ஆரம்பத்திலேயே ரசிகர்கள் பலரை கவர்ந்துவிட்டார். அதன்பின்னர் பேட்டிங்கில் அவர் காட்டிய அதிரடி, அவரது ரசிகர்களின் எண்ணிக்கையை உயர்த்தியது. அதுமட்டுமின்றி கேப்டனாக இருந்தபோது அவர் வெளிப்படுத்திய பொறுமை, ரசிகர்களிடம் அவர் நடந்துகொண்ட விதம், கடைசி வீரருக்கும் அவர் கொடுத்த வாய்ப்பு, போட்டியின் இக்கட்டான நேரங்களில் அவர் எடுத்த அதிரடி முடிவு, இந்திய விக்கெட்டுகளை இழந்து தடுமாறும்போது அவர் கொடுத்த பக்கபலம் என ரசிகர்களின் நாயகனாக தோனி மாறிவிட்டார்.

image

ஐபிஎல் போட்டிகள் தொடங்கி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக அவர் பொறுப்பேற்ற பின்னர், தமிழக கிரிக்கெட் ரசிகர்களின் அளவு கடந்த அன்பைப் பெற்று ‘தல’யாக மாறினார். நேற்று அவர் ஓய்வை அறிவித்தது முதல் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் தோனி தான் ட்ரெண்டிங்கில் இருக்கிறார். ஆனால் இந்த புகழையும், பெயரையும் தோனி எளிதில் அடைந்துவிடவில்லை. அவரது தலைமையில் இந்திய அணி குவித்த வெற்றிகள் ஏராளம். இந்திய கேப்டன்கள் யாரும் காணாத வெற்றிகளை கண்டவர் தோனி. வெற்றி என்பதை விட கோப்பை என தோனியின் வெற்றியை பட்டியல் போடலாம்.


Advertisement

2007 டி20 உலகக் கோப்பை :

image

இந்திய அணி 2007ஆம் ஆண்டு உலகக் கோப்பை தோற்ற பின்னர், வீரர்கள் அனைவரும் பெரும் நெருக்கடிக்குள்ளாகினர். அப்போது எதிர்பாராத விதமாக இந்திய டி20 அணியின் கேப்டனாக தோனி தேர்வு செய்யப்பட்டார். அவரது தலைமையில் களம் கண்ட இந்திய அணி யுவராஜ் அதிரடி, ஆர்.பி.சிங் பவுலிங் உள்ளிட்ட மிரட்டல்களுடன் இறுதிவரை சென்றது. இதற்கிடையே ஆஸ்திரேலிய அணியை இந்தியா அலறவிட்டது தனிக்கதை. இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்ட இந்தியா, 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் சார்பில் யாரும் எதிர்பாராத வகையில் இறுதி ஓவரை ஜொகிந்தர் ஷர்மா வீசினார். அந்த துணிச்சலான முடிவை எடுத்தது தோனி. பின்னாளில் அதுவே அவரது தனித்துவத்தை உலகம் அறிவதற்கு காரணமாகவும அமைந்தது.


Advertisement

2008 காமன்வெல்த் பேங்க் சீரியஸ் :

image

இந்தியா - இலங்கை - ஆஸ்திரேலியாவிற்கு இடையே நடந்த இத்தொடரில் இறுதிவரை சென்ற இந்திய அணி போராடி கோப்பையை வென்றது. ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் இந்தியா வீழ்த்தியது உலக நாடுகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. சச்சினின் அபார பேட்டிங், பிரவீன் குமாரின் சாதுர்ய பந்துவீச்சு இருந்தாலும், தோனியின் கேப்டன்ஷிப் முக்கிய பங்கு வகித்தது. அத்துடன் தோனி ராசியான கேப்டன் என்ற பெயரை ரசிகர்களிடையே இதில் பெற்றார்.

2011 உலகக் கோப்பை 

image

1983ஆம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது. அதன்பின்னர் ஒருமுறைகூட கோப்பையை வெல்லாததால், ரசிகர்கள் இந்திய அணி எப்போது கோப்பையை வெல்லும் என்ற ஏக்கத்தில் இருந்தனர். 2003ஆம் ஆண்டில் இந்திய அணி இறுதிப்போட்டி வரை சென்றதும் உற்சாகத்தில் இருந்த ரசிகர்களை, ஆஸ்திரேலியாவின் அசுரத்தனமான வெற்றி வருத்தத்தில் தள்ளியது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவை பந்தாடிய இந்திய அணி, அரையிறுதியில் பாகிஸ்தானை வென்றது. பின்னர் இறுதிப்போட்டியில் இலங்கை அணியை எதிர்கொண்டது. 2வது பேட்டிங் செய்த இந்திய அணிக்கு 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என இலக்கு நிர்ணயமானது.

வீரேந்திர சேவாக் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆக, நம்பிக்கை நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் 18 (14) ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் தூணாக நின்று கவுதம் காம்பீர் விளையாட, அவருடன் ஜோடி சேர்ந்த விராட் கோலி 35 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய தோனி சிறிதும் அச்சமின்றி இலங்கை வீரர்களின் பந்துவீச்சுகளை சிதறடித்தார். இறுதி வரை ஆட்டமிழக்காமல் ஆடிய தோனி 79 பந்துகளில் 91 ரன்கள் குவித்ததுடன், இறுதியாக சிக்ஸர் அடித்து வெற்றியை ருசித்தார். அவரது சிக்ஸரில் இந்திய நாடே துள்ளிக்குதித்தது.

2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி

image

உலகின் முன்னணி அணிகள் விளையாடும் சாம்பியன்ஸ் திரோபி தொடரில், தோனி தலைமையிலான இளைஞர் பட்டாளம் களம் கண்டது. ஒரு தோல்வியை கூட சந்திக்காத இந்திய அணி, இறுதிப் போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது.

2016 ஆசிய டி20 கோப்பை :

image

பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட முன்னணி நாடுகள் பங்கேற்ற இந்தத் தொடரில் இறுதி போட்டி வரை சென்ற பங்களாதேஷ் அணி, இந்தியாவை எதிர்கொண்டது. 15 ஓவர்கள் மட்டுமே கொண்டு நடத்தப்பட்ட அந்தப் போட்டியில் பங்களாதேஷ் அணி 120 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் ரோகித் ஷர்மா ஒரு ரன்னில் அவுட் ஆக, ஷிகர் தவா 44 பந்துகளில் 60 ரன்கள் விளாசினார். விராட் கோலி 28 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசி நேரத்தில் களமிறங்கிய தோனி 6 பந்துகளில் 20 ரன்கள் விளாசி அணியை வெற்றிக்கு கொண்டு சென்றார்.

“உங்கள் குரல் இன்னும் ஒலித்திட வேண்டும்” - எஸ்.பி.பி நலம்பெற கமல்ஹாசன் ட்வீட்


Advertisement

Advertisement
[X] Close