அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் இளைய சகோதரர் காலமானார்.
அமெரிக்காவின் நியூயார்கில் உள்ள கார்னெல் மருத்துவமனையில் உடல்நலக் கோளாறால் அனுமதிக்கப்பட்டிருந்த சகோதரர் ராபர்ட் ட்ரம்பை, அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்தார்.
இந்நிலையில் அதிபர் ட்ரம்ப் சந்தித்து சென்ற அடுத்த நாளே அவரது சகோதரர் ராபர்ட் டிரம்ப் உயிரிழந்துள்ளார். இதனை அதிபர் டொனால்ட் ட்ரம்பே உறுதி செய்துள்ளார்.
"எனதருமை சகோதரர் ராபர்ட் இன்று இரவு பூவுலகை விட்டு மறைந்தார் என்பதை கணத்த இதயத்தோடு நான் பகிர்ந்து கொள்கிறேன். அவர் என்னைவிட வயதில் இளையவராக இருந்தாலும் எனது சிறந்த நண்பராக இருந்தார். அவரை நான் மிஸ் செய்கிறேன். ஆனால் நாங்கள் மீண்டும் சந்திப்போம். என்றென்றும் அவரது நினைவுகள் என் நெஞ்சிலிருந்து நீங்காதவை. லவ் யூ ராபர்ட். RIP’ அதிபர் டிரம்ப் என தெரிவித்துள்ளார்.
72 வயதான ராபர்ட் டிரம்ப் பல துறைகளில் முதலீடு செய்து தொழில் செய்து வந்துள்ளார். கடந்த ஜூன் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது இறுதிச் சடங்களில் அதிபர் ட்ரம்ப் பங்கேற்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Loading More post
8வது நாள், 20 டிக்கெட்டுகள், ரூ.4,420 வசூல்.. கங்கனாவின் ‘தாகத்’ படத்துக்கு சோதனை!
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை.. பாகிஸ்தான் அரசு எடுத்த புதிய முடிவு.. மகிழ்ச்சியில் மக்கள்!
‘கோடையை சமாளிக்க உதவும்‘ - 20 நாட்களில் சென்னை வந்தடைந்த 1 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர்
’கருணாநிதி சிலை திறக்க மிகப் பொருத்தமானவர் வெங்கையா நாயுடு’ - முதல்வர் ஸ்டாலின்
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி