Published : 15,Aug 2020 06:26 PM
"70 வயது வரை வாழ விரும்பவில்லை" தற்கொலை செய்த டாக்டரின் அதிர்ச்சி கடிதம் !

70 வயது வரை வாழ விருப்பமில்லை என கூறி 40 வயதான எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர் மோஹித் சிங்கலா கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வந்தார் 40 வயதான மோஹித் சிங்கலா. இவர் தன் வீட்டில் தற்கொலை செய்துக்கொண்டார். வீட்டில் துர்நாற்றம் வீசிய காரணத்தால் அக்கம்பக்கத்தினர் போலீஸில் புகார் கொடுத்தனர். இதனையடுத்து கதவை உடைத்து வீட்டுக்கு சென்று பார்த்த போலீஸ், மோஹித் சிங்லகலாவின் அழுகிய நிலையில் இருந்த உடலை மீட்டனர்.
மேலும் வீட்டில் இருந்து மோஹித் சிங்கலா எழுதிய கடிதத்தையும் போலீஸார் கைப்பற்றினர் அதில் "இது என்னுடைய வாழ்க்கை அதனால் நான்தான் முடிவு செய்வேன். எனக்கு 60-70 வயது வரை வாழ விருப்பமில்லை. என்னுடைய மனநிலையை இதற்கு மேல் நான் மறைக்க விரும்பவில்லை" என குறிப்பிடப்பட்டிருந்தது.