Published : 15,Aug 2020 12:55 PM
'பிரித்தாளும் சக்திகளிடமிருந்து நாடும் தமிழகமும் விடுதலையடைய உழைப்போம்' - கமல்

கொரோனா தொற்றிலிருந்தும், பிரித்தாளும் சக்திகளிடமிருந்தும், நாடும் தமிழகமும் விடுதலையடைய உழைப்போம் என கமல் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், 74-வது சுதந்திர தினத்தையொட்டி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில் அவர், ''74வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுவோம். கொரோனா தொற்றிலிருந்தும், பசி, வறுமை, ஊழல், பிரித்தாளும் சக்திகள் இவற்றிடமிருந்தும், நாடும் தமிழகமும் விடுதலையடைய உழைப்போம்.
வளமான வாழ்க்கை அனைவருக்கும் என்ற நம் கனவு நனவாகட்டும். ஜெய்ஹிந்த்'' என்று பதிவிட்டுள்ளார்.
74வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுவோம். கொரோனா தொற்றிலிருந்தும், பசி, வறுமை, ஊழல், பிரித்தாளும் சக்திகள் இவற்றிடமிருந்தும், நாடும் தமிழகமும் விடுதலையடைய உழைப்போம்.
— Kamal Haasan (@ikamalhaasan) August 15, 2020
வளமான வாழ்க்கை அனைவருக்கும் என்ற நம் கனவு நனவாகட்டும்.
ஜெய்ஹிந்த்.