Published : 15,Aug 2020 11:32 AM

''லக் என்பது.... கிடையாது..'' - வெளியானது ‘குட் லக் சகி’ படத்தின் டீசர்

Keerthi-suresh-s-Good-Luck-Sakhi-teaser-released

நாகேஷ் குக்குனூரின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும், ‘குட் லக் சகி’ படத்தின் டீசர்  வெளியானது

‘குட் லக் சகி’ திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளில் வெளிவரவிருக்கிறது. கீர்த்தி சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் மூன்று மொழிகளின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று பகிர்ந்தார். மேலும் நாளை சுதந்திர தினத்தன்று டீர் வெளியிடப்போவதாகவும் தெரிவித்திருந்தார். அதன்படி இன்று டீசர் வெளியானது.

image

இந்த படத்தில் ஜகபதி பாபு மற்றும் ஆதி பினிசெட்டி போன்ற தெலுங்கு நட்சத்திரங்களும் நடிக்கின்றனர். தில் ராஜு தயாரிக்கும் இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். முதல்கட்ட படபிடிப்பு ஏப்ரல் 2019ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டது. படத்தின் முக்கிய பகுதிகளை விகராபாத் மற்றும் புனேவில் எடுத்துள்ளனர். அடுத்த ஆண்டு துவக்கத்தில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிர்ஷ்டம் என்பது எதுவுமில்லை. எல்லாம் நம் உழைப்பின் தான் இருக்கிறது என்ற மைய கருவுடன் இந்த படம் இருக்குமென தெரிகிறது. கீர்த்தி சுரேஷின் துடுக்கான நடிப்பு இந்த படத்தில் இருக்குமென ரசிகர்கள் எதிர்பாக்கின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்