ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டரும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் முக்கிய வீரரான கிளன் மேக்ஸ்வெல்லின் ஆல் டைம் ஐபிஎல் அணியில் தோனி இடம் பிடித்துள்ளார்.
2020ஆம் ஐபிஎல் தொடர் செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ள நிலையில், அதுதொடர்பான அப்டேட்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் திருவிழாவை வரவேற்கத் தயாராக உள்ளனர். அத்துடன் ஐபிஎல் தொடருக்கான பயிற்சிகளை அனைத்து அணியினரும் தொடங்கிவிட்டனர். இந்த முறை கோப்பை வெல்ல வேண்டும் என்பதில் அனைத்து அணிகளுமே தீவிரமாக உள்ளன. அத்துடன் தங்கள் அணியை கட்டமைப்பதிலும் அனைத்து அணியினரும் மும்முரம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் கிரிக்பஸ் இணையதளத்துக்கு பேசியுள்ள கிளன் மேக்ஸ்வெல் தனக்கு மிகவும் பிடித்த ஆல்டைம் ஐபிஎல் அணியை தேர்ந்தெடுத்துள்ளார். அதில் ஸ்டார் பேட்ஸ்மேனான ரோகித் சர்மாவுக்கு இடம் கொடுக்கவில்லை. ஆனால் தன்னுடைய அணியின் விக்கெட் கீப்பராக தோனியை தேர்வு செய்துள்ளார். அவருடைய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் விராட் கோலியை தேர்வு செய்து இருக்கிறார்.
மேலும் 3 மற்றும் 4 ஆவது பேட்ஸ்மேனாக ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் சுரேஷ் ரெய்னாவை சேர்த்துள்ளார். ஆல்ரவுண்டர்களாக தன்னையும், ஆண்ட்ரூ ரசலையும் இணைத்துள்ளார். விக்கெட் கீப்பராக தோனியையும், சுழற்பந்துவீச்சாளராக ஹர்பஜன் சிங்கையும் சேர்த்துள்ளார். வேகப்பந்துவீச்சாளராக புவனேஷ்வர் குமார், ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் மோகித் சர்மாவும் மேக்ஸ்வெல் அணியில் இடம் பிடித்துள்ளனர்.
Loading More post
தெருக்களில் ஜாதி பெயர்களை நீக்கும் பணி தீவிரம் - சென்னை மாநகராட்சி அதிரடி
விடியவிடிய செஸ் போட்டி: காலையில் +1 தேர்வு - கலக்கும் பிரக்ஞானந்தா!
”ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை” - தமிழக டிஜிபி எச்சரிக்கை
தடுமாற்றம்.. தடுமாற்றம்.. தடுமாற்றம்.. ரிப்பேர் ஆனதா ரன் மெஷின்? - கோலியும், 2022 சீசனும்!
424 விஜபிக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் - பஞ்சாப் அரசு அதிரடி
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி