’பயிற்சியை தவிர்த்து மற்ற நேரங்களில் மாஸ்க் கட்டாயம்’ சிஎஸ்கே வீரர்களுக்கு கட்டுப்பாடுகள்!

’பயிற்சியை தவிர்த்து மற்ற நேரங்களில் மாஸ்க் கட்டாயம்’ சிஎஸ்கே வீரர்களுக்கு கட்டுப்பாடுகள்!
’பயிற்சியை தவிர்த்து மற்ற நேரங்களில் மாஸ்க் கட்டாயம்’ சிஎஸ்கே வீரர்களுக்கு கட்டுப்பாடுகள்!

பயிற்சி நேரத்தை தவிர்த்து மற்ற அனைத்து நேரங்களிலும் வீரர்கள் மாஸ்க் அணிய வேண்டும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து புதிய தலைமுறைக்கு அவர் அளித்த பேட்டியில், “சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சென்னையில் பயிற்சி மேற்கொள்ள உள்ள நிலையில் வீரர்களுக்கு பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.வீரர்கள் அனைவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டு, முடிவுகள் நெகட்டிவ் ஆக வந்த பின்பே சென்னை வருகின்றனர்.

மேலும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க ஊழியர்கள், சேப்பாக்கம் மைதானத்தை நிர்வகிப்பவர்கள் என 150 நபர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டுள்ளோம். ஹோட்டலில் தனி தளத்தில் வீரர்கள் தங்க வைக்கப்படுவார்கள். குடும்பத்தினர், வெளி நபர்கள் யாரும் அவர்களை பார்க்க அனுமதி கிடையாது. ஹோட்டலில் இருந்து மைதானம், மைதானத்தில் இருந்து ஹோட்டல் இது தவிர்த்து வேறு எங்கும் வீரர்கள் செல்ல அனுமதி கிடையாது.

அனைவரும் அனைத்து நேரங்களிலும் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும், பயிற்சியின் போது மட்டும் வீரர்கள் மாஸ்க் அணிவதை தவிர்த்து கொள்ளலாம். வீரர்கள் பயன்படுத்தும் வாகனங்கள், பகுதிகள் என அனைத்தையும் கிருமி நாசினிகள் கொண்டு தொடர்ந்து சுத்தம் செய்து வருகிறோம்” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com