ஐ.பி.எல் பயிற்சி : சென்னை வந்த ’சின்ன தல’ ரெய்னா..!

ஐ.பி.எல் பயிற்சி : சென்னை வந்த ’சின்ன தல’ ரெய்னா..!
ஐ.பி.எல் பயிற்சி : சென்னை வந்த ’சின்ன தல’ ரெய்னா..!

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடப்பு சீசனுக்கான ஐ.பி.எல் தொடர் வரும் செப்டம்பர் மாதம் முதல் ஐக்கிய அமீரகத்தில் ஆரம்பமாக உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு விதிமுறைகளை விதித்துள்ளது பி.சி.சி.ஐ.

இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 15க்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சென்னையில் சில நாட்கள் முகாமிட்டு பயிற்சி செய்து விளையாடுவார்கள் என சி.எஸ்.கே நிர்வாகம் தெரிவித்திருந்தது.

அதை உறுதி செய்யும் வகையில் சி.எஸ்.கே அணியின் ‘சின்ன தல’ ரெய்னா சென்னைக்கு இன்று வந்துள்ளார். 

விஸ்டாரா விமானத்தில் சென்னைக்கு வந்துள்ளார் ரெய்னா. அவரோடு சென்னை அணியின் வீரர் தீபக் சாஹரும் வந்துள்ளார். 

‘எங்களை பத்திரமாக சென்னைக்கு அழைத்து வந்த விஸ்டாராவுக்கு நன்றி’ என இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார் ரெய்னா. 

விரைவில் சென்னை அணியின் மற்ற வீரர்களும் சென்னை வந்து பயிற்சி மேற்கொள்ள உள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com