Published : 28,Jun 2017 01:53 AM

விவாகரத்து கேட்ட மனைவிக்கு நீதிமன்றத்திலேயே அரிவாள் வெட்டு

Husband-attacked-Wife-in-court-Due-to-asking-divorce

கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றம் வந்த பெண் அரிவாளால் வெட்டப்பட்டார்.

சேத்தியாதோப்பு அருகே உள்ள எறும்பூர் கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் என்ப‌வருக்கு நதியா என்பவருடன் 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. தற்போது கணவரை பிரிந்து சுபாஷ் என்பவருடன் நதியா வசித்து வருகிறார். இந்நிலையில், தனது மனைவியை மீட்டுத்தரக்கோரி பாண்டியன் கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்துள்ளார். ஆனால், கணவரிடம் இருந்து நதியா விவகாரத்து கோரியுள்ளார். இந்த வழக்குக்காக நதியா சுபாஷின் குடும்பத்தினருடன் கடலூர் குடும்பநல நீதிமன்றத்திற்கு வந்தார். அப்போது ‌நதியாவை பாண்டியன் சரமாரியாக கத்தியால் வெட்டினார். தடுக்க முயற்சித்த சுபாஷின் தாயாருக்கும் வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதனை கண்ட பொதுமக்கள், பாண்டியனை மடக்கிப்பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். வெட்டப்பட்ட நதியா 5 மாத கர்ப்பிணி என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்