தமிழ் சினிமாக்களில் முத்திரை பதித்த நடிகைகளின் பட்டியலை புரட்டிப் பார்த்தால் அதில் நடிகை ஸ்ரீதேவிக்கு என்றும் தனி இடம் உண்டு. தமது அசாத்திய நடிப்பாலும், நளினமான அழகாலும் ஏராளமான ரசிகர்களை கட்டிப்போட்டவர். தமது நான்காவது வயதில், 1969-ஆம் ஆண்டு தமிழில் வெளியான ‘துணைவன்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, முருகன் வேடத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார் ஸ்ரீதேவி.
1976-ஆம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான ‘மூன்று முடிச்சு’ படத்தின் மூலம் கதாநாயாகி அவதாரம் எடுத்தார். பாரதிராஜாவின் ‘16 வயதினிலே’ படத்தில் மயில் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழின் உச்சிக்குச் சென்றார் ஸ்ரீதேவி.
தொடர்ந்து 1982-ஆம் ஆண்டு பாலுமகேந்திரா இயக்கத்தில் கமலஹாசனுடன் ‘மூன்றாம் பிறை’ படத்தில் நடித்த ஸ்ரீதேவி, ரசிகர்களின் பெரும் ஆதரவைப் பெற்றார். இதனையடுத்து ரஜினிகாந்த், கமலுடன் ஏராளமான படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் கோலோச்சினார்.
அதே நேரத்தில் பாலிவுட் படங்களிலும் கவனம் செலுத்திய ஸ்ரீதேவி, பாலிவுட் திரையுலகின் பெண் சூப்பர்ஸ்டார் என்ற பெருமையையும் பெற்றார்.
கடந்த 2018 பிப்ரவரி மாதம் துபாய் சென்றிருந்தபோது குளியலறை தொட்டியில் மூழ்கி உயிரிழந்தார். இன்று ஸ்ரீதேவியின் 57 பிறந்தநாளை முன்னிட்டு சமூக வலைத்தளங்களில் பலரும் அவரது நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
அசாத்தியமான நடிப்பையும் மிஞ்சி திரைப்படங்களில் கதாபாத்திரமாகவே வாழ்ந்த ஸ்ரீதேவியை அவ்வளவு எளிதில் திரையுலகம் மறந்துவிடாது என்பது நிதர்சனமான உண்மை.
Loading More post
'மதரஸா' என்ற வார்த்தையே இருக்கக் கூடாது - முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா
சென்னை: பைக்கில் பின்னால் அமர்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்... மீறினால் அபராதம்
`இங்க இருக்க பயமாருக்கு ப்பா’- கேரள விஸ்மயாவின் கடைசி வார்த்தைகள்; வழக்கில் இன்று தீர்ப்பு
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
பழங்குடியின பள்ளி மாணவி மீது இளைஞர் சரமாரி தாக்குதல் - முதல்வர் அதிரடி உத்தரவு
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்