நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள சஞ்சய் தத்துக்கு ஆறுதல் தரும் விதமாக தன்னால் அந்த வலியை புரிந்துக்கொள்ள முடியும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி சஞ்சய் தத்திற்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, டாக்டர்கள் ஆர்.டி., பி.சி.ஆர். உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் மேற்கொண்டனர். இதில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளக்கப்பட்டன. பின்னர் குணமடைந்தார். இந்நிலையில் அவருக்கு நுரையீரலில் புற்றுநோய் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
சஞ்சய் தத்திற்கு நுரையீரல் புற்றுநோய் மூன்றாம் கட்ட நிலையில் உள்ளதால், மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளதாக சினிமா ஊடகவியலாளர் கோமல் நத்தா தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். முன்னதாக, நடிகர் சஞ்சய் தத் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில், 'ஹாய் நண்பர்களே, நான் சில மருத்துவ சிகிச்சைக்காக பணியில் இருந்து ஓய்வு எடுத்து வருகிறேன். எனது குடும்பத்தினரும் நண்பர்களும் என்னுடன் இருக்கிறார்கள். எனது நலம் விரும்பிகள் கவலைப்படவோ தேவையில்லாமல் சிந்திக்கவோ வேண்டாம். உங்கள் அன்பு மற்றும் வாழ்த்துக்களுடன், நான் விரைவில் நலமுடன் திரும்புவேன்' என அந்த பதிவில் கூறியிருந்தார்.
You are, have and always will be a fighter @duttsanjay. I know the pain it causes but I also know you are strong and will see this tough phase through. My prayers and best wishes for your speedy recovery. — Yuvraj Singh (@YUVSTRONG12) August 11, 2020
இதற்கு பதிலளித்துல்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் "நீங்கள் இப்போது மட்டுமல்ல எப்போதும் ஓர் போராளி. இந்த வலி எத்தகையது என்பதை என்னால் உணர முடியும். ஆனால் நீங்கள் எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் கொண்டவர் எனவே இந்தக் கடினமான காலக்கட்டத்தையும் எதிர்கொள்வீர்கள் என தெரியும். என்னுடைய பிரார்த்தனை எப்போதும் இருக்கும் விரைவில் மீண்டு வர வாழ்த்துகள்" என பதிவிட்டுள்ளார்..
Loading More post
”அடுத்த சீசனில் இந்த இளம் பவுலர் நிச்சயம் சிறப்பாக விளையாடுவார்” - தோனி சொன்ன அந்த வீரர்?
‘நான் சொன்ன கருத்தைத்தான் பிரதமரும் எதிரொலிக்கிறார்‘ - கிச்சா சுதீப்பின் புதிய கமெண்ட்!
மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்களை தேர்வுசெய்வதில் அதிமுகவில் நீடிக்கும் இழுபறி!
இம்ரான் தாஹிரின் மிகப்பெரிய சாதனையை சமன் செய்தார் சாஹல்! என்ன சாதனை?
லக்னோவில் 10 நாட்களுக்கும் மேலாக தாயின் சடலத்துடன் வசித்த மகள்! என்ன காரணம்?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!