Published : 12,Aug 2020 01:34 PM
ஜெயலலிதா இல்லத்தை நினைவு இல்லமாக்குவது கொள்கை முடிவு: தமிழக அரசு

ஜெயலலிதா இல்லத்தை நினைவு இல்லமாக்குவது கொள்கை முடிவு என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
ஜெயலலிதா இல்லம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஜெயலலிதா இல்லத்தை நினைவு இல்லமாக ஆக்குவதை மறு பரிசீலனை செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில், ஜெ.இல்லத்தை நினைவு இல்லம் ஆக்குவது கொள்கை முடிவு என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. கொள்கை முடிவு என்பதால் அதை மறுபரிசீலனை செய்யுமாறு விடுத்த பரிந்துரையை பின்பற்ற முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளது.