
தேவையில்லாத சர்ச்சையில் என்னை இழுக்காதீர்கள். நான் இப்போது குழந்தை பெற்றுக் கொள்ள போகிறேன். என்னுடைய தனிப்பட்ட உரிமையை மதியுங்கள் டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் கூறியுள்ளார்.
பிரபல அமெரிக்க டென்னிஸ் வீராங்கனையான செரினா வில்லியம்ஸ் விரைவில் குழந்தைக்கு தாயாக போகிறார். இதனால் அவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஒதுங்கி உள்ளார். இந்நிலையில் டென்னிஸ்ஸில் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் வீரரான ஜான் மெக்கென்ரோ, செரினா வில்லிம்ஸ் ஆடவர் பிரிவில் விளையாடினால் உலக அளவில் நிச்சயமாக 700-ஆவது ரேங்க்கிற்கு அதிகமாகத் தான் இருந்திருப்பார் என தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள செரினா வில்லியம்ஸ், "டியர் ஜான் உங்கள் மீது அதிக மரியாதை வைத்துள்ளேன். தேவையில்லாத சர்ச்சையில் என்னை இழுக்காதீர்கள். நான் இப்போது குழந்தை பெற்றுக் கொள்ள போகிறேன். என்னையும், என்னுடைய தனிப்பட்ட உரிமையையும் தயவு செய்து மதியுங்கள்" என கூறியுள்ளார்.