Published : 11,Aug 2020 04:56 PM

பும்ரா ? மலிங்கா ? ஸ்டார்க் ? - சூப்பர் ஓவர் பர்ஃபெக்ட் யாரென்று சோப்ரா பதில்..!

Lasith---Malinga--Jasprit-Bumrah-or-Mitchell-Starc---Aakash---Chopra-pick-Super-Over-bowler

சூப்பர் ஓவரில் பந்துவீச பும்ரா ? மலிங்கா ? ஸ்டார்க் ? இதில் யார் சரியானவர் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் வரலாற்றில் பெரும் சுவாரஸ்யத்தை கொண்டு வந்த ஒரு விதிமுறை தான் சூப்பர் ஓவர். போட்டி சமனில் முடிந்தால் நடத்தப்படும் சூப்பர் ஓவர் முறை என்பது ரசிகர்களை இருக்கையின் நுனிக்கு அழைத்துச் செல்லும் என்பதில் ஆச்சர்யமில்லை. கடந்த 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி சூப்பர் ஓவர் வரை சென்றது இதற்கு ஒரு உதாரணம்.

image

இப்படிப்பட்ட சூப்பர் ஓவரை வீசுவதற்கு சர்வதேச கிரிக்கெட் பவுலர்களில் யார் சரியானவர் என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தனது கருத்தை தெரிவித்துள்ளார். சுழற்பந்து வீச்சாளர்கள் என்றால் ஆஃப்கானிஸ்தானின் ரஷித் கான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் சுனில் நரைன் ஆகியோரை அவர் தேர்வு செய்துள்ளார். இதில் ரஷித் கானுக்கு முன்னுரிமை அளித்துள்ளார்.

image

இதேபோன்று வேகப் பந்துவீச்சாளர்களில் மலிங்கா, பும்ரா மற்றும் மிட்ஜெல் ஸ்டார்க் ஆகியோரை அவர் தேர்வு செய்திருக்கிறார். இதில் பும்ராவை முதல் தேர்வாகவும், அதற்கு அடுத்தபடியாக ஸ்டார்க், அதைத்தொடர்ந்து மலிங்காவை தேர்வு செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்டார்க் தரமான யார்க்கர் வீசக்கூடியவர் என்றாலும், வேகம் குறைந்த பந்து மற்றும் பவுன்சர்களை வீசுவதில் சரிப்படமாட்டார் என சோப்ரா குறிப்பிட்டுள்ளார். ஆனால் இவை இரண்டையும் யார்க்கருடன் சேர்த்து வீசக்கூடிய திறமையை பும்ரா பெற்றிருப்பதால் அவரே தனது முதல் தேர்வு என்றும் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு கொரோனா தடுப்பூசி : ரஷ்யாவில் தொடக்கம்

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்