
மை டூ பாய்ஸ் என்கிற கேப்சனுடன் இரண்டு சிறுவர்கள் இருக்கும் புகைப்படம் ஒன்றை மகேந்திர சிங் தோனியின் மனைவி சாக்ஷி தனது இன்ஸ்ட்கிராமில் பதிவு செய்துள்ளார்.
ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. இந்நிலையில் தோனியின் மனைவி இரண்டு குழந்தைகளுடன் தனது இன்ஸ்ட்கிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். 'மை டூ பாய்ஸ்' என்கிற கேப்சனுடன் வெளியிடப்பட்டுள்ள அப்புகைப்படத்தில் ஷிகர் தவானின் மகன் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் பிராவோவின் மகன் ஆகியோர் உள்ளனர். புகைப்படத்தில் குழந்தைகள் இருவரும் வேடிக்கையான முகத்துடன் காட்சியளிக்கின்றனர். மேலும் சாக்ஷி சிரித்தவாறு காட்சியளிக்கிறார். முன்னதாக, வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான இரண்டாவது போட்டிக்கு பின்னர், இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி, தோனி, ரஹானே மற்றும் ஷிகர் தவான் உள்ளிட்டோருக்கு பிராவோ தனது வீட்டில் விருந்து விருந்தளித்தது குறிப்பிடத்தக்கது.