Published : 11,Aug 2020 11:25 AM

கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் தான் சபரிமலைக்கு செல்லலாம்- அமைச்சர் தகவல்

COVID--ve-certificates-made-mandatory-for-devotees-going-to-Sabarimala

இந்த ஆண்டு சபரிமலை யாத்திரைக்குச் செல்லும் பக்தர்களுக்கு கோவிட் -19 நெகட்டிவ் சான்றிதழ்கள் கட்டாயமாக தேவை என்று கேரள தேவஸ்வம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

image

இதுகுறித்து பேசிய அமைச்சர் “ இந்த ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி சபரிமலை சீசன் தொடங்கவிருக்கிறது. அதனால் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளின்படிதான் இந்த ஆண்டு சபரிமலை  யாத்திரைக்கு அனுமதியளிக்கப்படும். மேலும் மின்னணு வரிசைமுறை மூலமாக  குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். சன்னிதானம், பம்பா மற்றும் நிலக்கல் ஆகிய பகுதிகளிலுள்ள மருத்துவமனைகள் பலப்படுத்தப்படும், பக்தர்களின் சமூகஇடைவெளியை உறுதி செய்வதற்காக பம்பாவிற்கும் நிலக்கலுக்கும் இடையே மேலும் அதிகளவிலான பேருந்துகள் இயக்கப்படும்” என்று தெரிவித்தார்

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்