[X] Close

11 ஆம் வகுப்பில் சேர்வதற்காக விண்ணப்பித்துள்ள ஜார்கண்ட் அமைச்சர்

இந்தியா

Jharkhand-HRD-minister-applies-for-admission-in-class-11-as-regular-student

ஜார்கண்ட் மாநிலத்தின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜகர்நாத் மஹ்டோ , நேற்று பொகாரோ மாவட்டத்திலுள்ள  அரசு உதவிபெறும் இடைநிலைக் கல்லூரியான நவாடிஹ் தேவி மஹ்தோ இன்டர் கல்லூரியில்  11-ஆம் வகுப்பில் சேர விண்ணப்பித்தார்.

image

53 வயதான  மஹ்டோ மீண்டும் தனது கல்வியை கிட்டத்தட்ட  25 ஆண்டுகளுக்குப்  பிறகு தொடங்குகிறார், அவர் 1995-இல் 10 வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றார். ஜார்க்கண்டின்  மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக  பொறுப்பேற்றதிலிருந்தே இவர் தனது கல்வித் தகுதிக்காக பொது மக்களிடமிருந்தும், சட்டமன்ற உறுப்பினர்கள் பலரிடமிருந்தும்  விமர்சனங்களை எதிர் கொண்டுவருவதாக தெரிகிறது,


Advertisement

இதுபற்றி பேசும் மஹ்டோ "எனது கல்வியை மீண்டும் தொடங்குவதற்கு தொடர்ச்சியான விமர்சனங்கள் ஊக்கமளித்தன. நான் ஜார்க்கண்டின் கல்வி அமைச்சராக்கப்பட்டதிலிருந்து, ஒரு பகுதியினர் எனது கல்வித் தகுதி குறித்து  கோபத்துடன் இருந்தனர். அதனால்தான் எனது படிப்பை மீண்டும் தொடங்க முடிவு செய்தேன். முதலில் இடைநிலைத்தேர்வுகளில் வெற்றிபெற்றபிறகு, உயர்கல்வி படிக்கும் விருப்பமும் உள்ளது ” என்று அவர் கூறினார். அமைச்சர் மஹ்டோ மட்டுமல்ல ஜார்கண்ட் அமைச்சரவையில் உள்ள மேலும் நான்கு அமைச்சர்களும் 10 வகுப்பு வரை படித்தவர்கள்தான்.

 

 

 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close