[X] Close

வீட்டிற்குள் தீப்பிடித்ததில் தாய், இரண்டு மகன்கள் பலி... கரூரில் சோகம்...

மாவட்டம்

Three-killed-in-house-fire--mother--two-sons-----Tragedy-in-Karur----

கரூர் ராயனூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் இவருக்கு முத்துலட்சுமி. என்ற மனைவியும், 3 வயதில் தட்சித், ரட்சித் என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கணவன் பாலகிருஷ்ணனை விட்டுப் பிரிந்த முத்துலட்சுமி தனியாக. குழந்தைகளுடன் வசித்து வந்தவர், அந்தப் பகுதில் உள்ள மளிகை கடை ஒன்றில் வேலை பார்த்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை சுமார் 6 மணி அளவில் முத்துலட்சுமி வீட்டில் இருந்து தீப்பிடித்து புகை அதிக அளவில் வெளியே வந்தது.


Advertisement

image

அருகில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது முத்துலட்சுமி தீப்பிடித்து எரிந்து நிலையில் உயிரிழந்து கிடந்தார். அவரது இரண்டு குழந்தைகளும் புகையால் மூச்சு திணறிய நிலையில் கிடந்தனர். உடனடியாக இரண்டு சிறுவர்களையும் மீட்ட போலீசார் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இருவரும் இறந்தனர். முத்துலட்சுமியும் தீயால் முற்றிலும் எரிந்து சடலமாக மீட்கப்பட்டார்.


Advertisement

இது குறித்து தான்தோன்றிமலை காவல்நிலைய போலீசார் விசாரிக்கத் தொடங்கினர். இதில் அவர்களுக்கு பல்வேறு சந்தேகங்களுக்கு விடை தெரியாத அளவுக்கே தகவல்கள் கிடைத்தன. முத்துலட்சுமி உயிரிழந்து கிடந்த இடம் அருகில் செல்போன் சார்ஜரும் தீப்பற்றி எரிந்த நிலையில் கிடத்தது. எனவே இரவில் சார்ஜ் போட்டிருந்த போது செல்போன் வெடித்து தீப்பிடித்திருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது.

image

மேலும், முத்துலட்சுமி தனது கணவர் பாலகிருஷ்ணனை விட்டு பிரிந்து 2 ஆண்டுகளாக தனியாக தனது சொந்த வீட்டில் வசித்துள்ளார். அந்த வீட்டின் பேரில் 10 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருக்கிறார் எனவும் கூறப்படுகிறது.


Advertisement

இவ்வளவு சந்தேகங்களில் அடிப்படையில், செல்போன் சார்ஜர் தீப்பிற்றி எழுந்ததால் தீ விபத்து ஏற்பட்டு முத்துலட்சுமியும் குழந்தைகளும் உயிரிழந்தனரா.. அல்லது கணவனை பிரிந்த காரணத்தால், முத்துலட்சுமி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கடன் பிரச்னையால் தற்கொலை செய்து கொண்டாரா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

image

இந்நிலையில், முத்துலட்சுமி மற்றும் அவரது இரண்டு குழந்தைகளும் தீயால் உயிரிழந்ததை சந்தேக மரணமாக வழக்குப் பதிந்துள்ள போலீசார் கூடற்கூறு ஆய்வு அறிக்கை கிடைத்த பிறகே உண்மை நிலவரம் தெரியவரும் என தெரிவித்தனர்.


Advertisement

Advertisement
[X] Close