எழுதுவதற்கு கைகள் தேவையில்லை… ஆர்வமும் திறமைமையும் இருந்தால் போதும். கால்களால்கூட தேர்வு எழுதி தேர்ச்சிபெறலாம் என்று சாதித்துக்காட்டியிருக்கிறார் கர்நாடகாவைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர் கெளசிக். அதுவும், 424 மதிப்பெண்கள் எடுத்து பலரது பாராட்டு கைக்குலுக்களுக்கும் ஆளாகியிருக்கிறார்.
பிறக்கும்போதே, தனது இரண்டு கைகளும் போலியாவால் பாதிப்படைந்தாலும், கெளசிக்கின் படிக்கும் ஆர்வம் மட்டும் பாதிப்படையவில்லை. கைகள் இல்லையென்றால் என்ன? கால்களையே கைகளாக்கி பாடங்களை எழுதி படித்து வந்தார். இந்நிலையில், வாழ்வின் முக்கிய காலக்கட்டத்திற்கு எடுத்துச்செல்லும் பத்தாம் வகுப்புத் தேர்வையும் கால்களாலேயே எழுதி முடித்துள்ளார்.
கைகள் இருப்பவர்களுக்கே தொடர்ச்சியாக எழுதினால் ஒருக்கட்டத்தில் கை வலிக்க ஆரம்பித்துவிடும். ஆனால், கால்களால் தேர்வு என்பதை யோசித்துப் பார்க்கவே சோர்வாக இருக்கும் சூழலில், சிறுவன் கெளசிக் அதைச் செய்துமுடித்து சாதித்தும் காட்டியுள்ளார். சமீபத்தில், வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 424 மதிப்பெண்கள் பெற்று மாபெரும் சாதனை செய்திருக்கிறார். இவரின், சாதனையை பாராட்டி கர்நாடக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமார் நேரிலேயே வந்து ஊக்கப்படுத்திவிட்டு சென்றிருக்கிறார்.
கட்டைவிரலால் பேனாவைப் இறுக்காமாக பிடித்து எழுதவதற்கு சிறுவயதிலிருந்து பயிற்சியும் எடுத்துள்ளார். பொதுத்தேர்வில் தனக்கென்று யாரையும் எழுத அவர் நியமித்துக் கொள்ளவில்லை. அப்படியிருந்தும் இந்த சாதனை மகத்தானதுதான். மேலும், நீச்சல், யோகா, கால்களால் ஓவியம் வரைதல் ஆகியவற்றிலும் சிறந்து விளங்கும் கெளசிக் அரசுப்பள்ளி மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்