[X] Close

அன்பே சிவம், புதுப்பேட்டை படங்களின் தயாரிப்பாளர் சுவாமிநாதன் - கொரோனாவால் காலமானார்

தமிழ்நாடு

Film-producer-swaminathan-died-of-corona--he--produced-anbe-sivam-and-pudhupet

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக கடைப்பிடிக்கப்படும் அதே வேளையில் உயிரிழப்புகளும் நேரிட்டுவருகின்றன. இந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த லட்சுமி மூவி மேக்கர்ஸ் படத் தயாரிப்பாளர் வி. சுவாமிநாதன் இன்று காலமானார்.


Advertisement

தமிழில் லட்சுமி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் கே.முரளிதரன், ஜி.வேணுகோபால் ஆகியோருடன் இணைந்து அரண்மனை காவலன், வேலுச்சாமி, மிஸ்டர் மெட்ராஸ், கோகுலத்தில் சீதை, தர்மசக்கரம், பகவதி, அன்பே சிவம், தாஸ், ஒருவன், சிலம்பாட்டம், புதுப்பேட்டை, ஆட்டநாயகன், சகலகலா வல்லவன் உட்பட ஏராளமான படங்களை அவர் தயாரித்தார்.

கடந்த ஒரு வாரமாக சுவாமிநாதன், கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்தார். அவருக்கு வயது 67. இவருக்கு லலிதா என்கிற மனைவியும் அசோக், அஸ்வின் என இரு மகன்களும் உள்ளனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close