[X] Close

இது இந்தியாவா? "இந்தி " யாவா? - ஸ்டாலின் கேள்வி

தமிழ்நாடு

Is-this-India--What-is--Hindi---Stalin-s-question-to-the-central-government

சென்னை விமான நிலையத்தில் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழியிடம் இந்தி தெரியாது என்றதும் ஒரு பெண் பாதுகாப்பு அதிகாரி, நீங்கள் இந்தியரா என்று கேள்வி எழுப்பினார்.


Advertisement

இதுபற்றி டிவிட்டரில் பதிவிட்டிருந்த அவர் “இன்று விமான நிலையத்தில் இருந்த சிஐஎஸ்எஃப் அதிகாரி ஒருவரிடம், இந்தி தெரியாததால் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் என்னிடம் பேசும்படி அறிவுறுத்தினேன். அதற்கு அவர் என்னை “நீங்கள் இந்தியரா?” என்று வினவினார். இந்தி தெரிந்தால்தான் இந்தியர் என்ற நிலை உருவானது எப்போது” என்று கேள்வியெழுப்பியிருந்தார்.

image


Advertisement


Today at the airport a CISF officer asked me if “I am an Indian” when I asked her to speak to me in tamil or English as I did not know Hindi. I would like to know from when being indian is equal to knowing Hindi.#hindiimposition

— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) August 9, 2020

இதற்கு ப. சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தன்னுடைய டிவிட்டரில் "இந்திதான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா? இது இந்தியாவா? “இந்தி”-யாவா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவர், "பன்முகத்தன்மைக்கு புதைகுழி தோண்டுகிறவர்களே அதில் புதையுண்டு போவார்கள்!" என்றும் சாடியுள்ளார்.


Advertisement

Advertisement
[X] Close