மத்திய அரசு உத்தரவை மீறி இபாஸ் நடைமுறையை தொடர்வது மனித உரிமை மீறலா என தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழ்நாடு மக்கள் நுகர்வோர் பேரவை திண்டுக்கல் மாவட்ட தலைவர் விஸ்வரத்தினம் மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், மத்திய அரசு இபாஸ் வழங்குவதில் தளர்வுகள் அளித்துள்ளது. சுதந்திரமாக செயல்படுவதை தடுக்கும் வகையில் இபாஸ் முறை தமிழகத்தில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதனால் மாணவர்களுக்கு அட்மிஷனுக்கு செல்லவும், சொந்த ஊருக்கு செல்லவும், சொந்த ஊரிலிருந்து பணி நிமித்தமாக வேறு இடங்களுக்கு செல்லவும் சிரமங்கள் நீடிக்கின்றன. இதில் மனித உரிமை மீறல் இல்லையா என தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு இபாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்து விசாரித்த மனித உரிமை ஆணையம் மத்திய அரசு உத்தரவை மீறி இபாஸ் நடைமுறையை தொடர்வது மனித உரிமை மீறலா என 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு தலைமை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Loading More post
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நிதின் கட்கரி எழுந்து நிற்காதது ஏன்? - அமைச்சர் மனோ தங்கராஜ்
கோயில் திருவிழா பாதுகாப்பில் குளறுபடி? - தடுப்பு மீது ஏறிக்குதித்த எம்பி ஜோதிமணி!
ஓ.பன்னீர்செல்வத்திடம் சில நிமிடங்கள் தனியாக பேசிய பிரதமர் மோடி!
ரயில் வரவேற்பு விழா: தேனி ரயில் நிலையத்தில் விடிய விடிய பறந்த 'தேசியக் கொடி'!
சமபலத்துடன் பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் - இறுதிப் போட்டிக்கு செல்வது யார்? இன்று மோதல்!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!