Published : 09,Aug 2020 03:24 PM
”எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசம்” - விராட் கோலியின் பதிவால் அலறும் இன்ஸ்டாகிராம்

ஐபிஎல் போட்டிகள் வருகிற செப்டம்பர் மாதம் நடக்க உள்ள நிலையில் விராட் கோலி தனது ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடனான பிணைப்பை வெளிப்படுத்தும் வகையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் ஏப்ரல் - மே மாதங்களில் நடக்க வேண்டிய ஐபிஎல் போட்டிகள் கால வரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து பிசிசிஐ, ஐபிஎல் போட்டிகள் அரபு நாடுகளில் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் நடைபெறும் என்ற அறிவிப்பை வெளியிட்டது.
View this post on InstagramLoyalty above everything. Can't wait for what's to come. ?
A post shared by Virat Kohli (@virat.kohli) on
இந்நிலையில் இந்திய அணியின் கேப்டனும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டனுமான விராட் கோலி ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடனான பிணைப்பை வெளிப்படுத்தும் வகையில் அவரது இன்ஸாடாகிராம் பக்கத்தில் “ எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசம். என்ன வரப்போகிறது என்று காத்திருக்க முடியாது என பதிவிட்டு வீடியோ ஒன்றையும் இணைத்துள்ளார். அதில் ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் அணியுடனான உடற்பயிற்சி சார்ந்த வீடியோக்கள், நேர்காணல்கள், சக வீரர்களுடன் ஜாலியாக இருந்தது போன்ற பலத் தருணங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.