[X] Close

230 மில்லியன் ஆண்டுகள் பழமையான 236 காரட் சுத்த வைரம் - ரஷ்யாவில் கண்டுபிடிப்பு!

உலகம்

236-carat-old-large-diamond-found-in-Russia

யாகுட்டியாவின் வடக்கே அனாபர் நதிக்கு அருகேயுள்ள எபிலியாக் சுரங்கத்தில் தொழிலாளர்களால் ஒரு விலை மதிப்பற்ற கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இது லப்தேவ் கடற்கரைக்கு அருகே உள்ளது. யாகுட்ஸ்கிலிருந்து 1,211கி.மீ தொலைவில் கிடைத்துள்ளது.


Advertisement

இந்த சுரங்கம் அல்ரோசா குழுமத்தின் டயமன்ஸ் ஆஃப் அனபருக்கு சொந்தமானது. அரக்கு பிசின் நிறத்தில் இருக்கும் இந்த வைரத்தின் பரிமாணாங்கள் 47x24x22 மிமீ ஆக உள்ளது. இத்தகைய உயர்தர மெருகூட்டப்பட்ட பெரிய வைரம் ஒரு தனித்துவமான கண்டுபிடிப்பு. இந்த கல், நிபுணர்களால் ஆராய்ச்சி செய்யப்பட்டு மதிப்பீடு செய்யப்ப்படும் அல்ரோசாவின் யுனைடெட் விற்பனை அமைப்பின்கீழ் உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர். இது அல்ரோசாவின் குறுக்குவெட்டு மற்றும் மெருகூட்டல் பிரிவுக்கு அனுப்பப்படுமா அல்லது தோராயமாக விற்கப்படுமா என்று இன்னும் முடிவு செய்யவில்லை.

image


Advertisement

கடந்த பல ஆண்டுகளாக எபிலியாக் சுரங்கத்தில் இருந்து பிரகாசமான கரடுமுரடான பல வைரங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. 2017ஆம் ஆண்டு கோடைகாலத்தில் மட்டும் ஒரு கிரிம்சன், ஒரு இளஞ்சிவப்பு மற்றும் ஒரு அடர் மஞ்சள் கற்கள் ஒரு மாதத்திற்குள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement
[X] Close