[X] Close

பாவனா வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு தயார்: திலீப்

Investigation-of-Dileep-in-Bhavana-case

நடிகை பாவனா கடத்தல் தொடர்பான சர்ச்சையில் சிக்கி உள்ள பிரபல மலையாள நடிகர் திலீப், உண்மை கண்டறியும் சோதனைக்கு தயார் என்று தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ’ஊடகத்தில் சில தரப்பினர், பாவனா கடத்தலில் என் பெயரை சேர்க்க முயற்சிக்கின்றனர். எந்த வழக்கிலும் எனக்கு எந்த பங்கும் இல்லை என ஊடகங்களுக்கும்,  என்னை குற்றவாளியாக்க முயற்சிக்கும் நபர்களுக்கும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். பிரைன் மேப்பிங், நார்கே அனாலிசிஸ், உண்மை கண்டறியும் சோதனை என எந்த வகையிலும் என்னை சோதனைக்கு ஆட்பட தயாராக இருக்கிறேன்’ என அவர் தெரிவித்து உள்ளார். நடிகை பாவனா கடந்த பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி பல்சர் சுனி, மார்ட்டின் உள்ளிட்ட 6 நபர்களால் கடத்தப்பட்டு துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். 
 


Advertisement

Advertisement
[X] Close