[X] Close

’விண்ணப்பிக்க அவமானப்படாதீர்கள்’: சொமேட்டோ ஊழியர்களுக்கு 10 நாட்கள் ‘பீரியட் லீவ்’

இந்தியா

Zomato-introduces-10-days--period-leave-

சொமோட்டோ நிறுவனம் நாட்டில் மிக உயர்ந்த பிரபலமான நிறுவனங்களில் ஒன்று. இங்கு வேலை செய்யும் பெண்கள் ஆண்டுக்கு 10 நாட்கள் வரை ‘பீரியட் லீவ்’ எடுத்துக்கொள்ளலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது. ’இந்த விடுப்புக்கு விண்ணப்பிப்பதில் எந்த அவமானமும் இருக்கக்கூடாது’ என தலைமை நிர்வாகி தீபிந்தர் கோயல் இன்று ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.


Advertisement

உங்களுடன் பணிபுரியும் குழு நபர்களிடம் இந்த விடுப்புப் பற்றி சொல்வதற்கோ, மின்னஞ்சல் அனுப்புவதற்கோ எந்த தயக்கமும் காட்டக்கூடாது என கூறியுள்ளார்.

image


Advertisement

2008இல் நிறுவப்பட்ட குருகிராம் சார்ந்த சொமேட்டோ நிறுவனத்தில் 5,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

மாதவிடாய் குறித்த விழிப்புணர்வு இல்லாத காரணத்தால்தான் இந்தியாவில் லட்சக்கணக்கான பெண்கள் பல சுகாதாரப் பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். இதனைக் கருத்தில்கொண்டு, மாதவிடாய் காலம் பெண்களின் வேலைக்கு தடையாக இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில் இந்த ‘பீரியட் லீவ்’ வசதியை சொமேட்டோ அறிமுகப்படுத்தியுள்ளது.

 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close