செப்டிசீமியா - ரத்தத்தில் பாக்டீரியா தொற்றால் வரும் நோய்

செப்டிசீமியா - ரத்தத்தில் பாக்டீரியா தொற்றால் வரும் நோய்
செப்டிசீமியா - ரத்தத்தில் பாக்டீரியா தொற்றால் வரும் நோய்

பாக்டீரியாக்கள் ரத்தத்தில் நுழைந்து உடல் முழுவதும் பரவி உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய சிக்கலான நோய் செப்டிசீமியா. இது செப்சிஸ் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த பாக்டீரியா தொற்று ரத்தத்தில் பரவும் போது, உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் ரத்தத்தில் நிறைய ரசாயனங்களை வெளியிடுகிறது. இது உடலின் உறுப்புகளை சேதப்படுத்தும் வகையில் அழற்சியை உருவாக்குகிறது. இதனால் ரத்தத்தில் கட்டிகள் உருவாகி கால்கள் வரை உறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் சீராக நடைபெறுவதைக் குறைக்கிறது. எனவே உறுப்புகளுக்கு போதுமான ஊட்டச்சத்துகள் மற்றும் ஆக்ஸுஜன் கிடைக்காது போய்விடுகிறது.

நிலைமை மோசமாகும்போது, செப்சிஸ் ரத்த அழுத்தத்தை மிகவும் குறைத்து, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துகிறது. இதனை ‘செப்டிக் அதிர்ச்சி’ என மருத்துவர்கள் அழைக்கின்றனர். இதனால் நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகள் விரைவாக செயலிழக்கக்கூடும். தோல், சிறுநீர்பாதை மற்றும் பிற நோய்த்தொற்றுகளைத் தூண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் 1.5 மில்லியனுக்கும் அதிகமானோர் செப்சிஸால் பாதிக்கப்படுகிறார்கள். இதில் 2,50,000 பேர் இறந்துவிடுவதாக அறிக்கைகள் தெரிவிக்கிறது.

யார் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்?

இது வயதானவர்கள், மிக இளம் வயதினர்கள், நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம்.

எச்.ஐ.வி மற்றும் புற்றுநோயால் நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள்

ஸ்டீராய்டு மருந்துகளை அதிகமாக எடுத்துக்கொள்ளுதல்

கருவுற்ற பெண்களுக்கு

சுவாசப் பிரச்னையால் சுவாசக் குழாய்களைப் பயன்படுத்துபவர்களுக்கு

செப்சிஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிமோனியா வரும் வாய்ப்புகள் அதிகம்.

அறிகுறிகள்

காய்ச்சல், நடுக்கம், குளிர்
இதயத் துடிப்பு அதிகரிப்பு
மூச்சுவிடுவதில் சிரமம்
வியர்த்தல்
தூக்கம், குழப்பம், எதிலும் நாட்டமின்மை போன்ற மனம் சார்ந்த பிரச்னைகள்

இதுதவிர,
மயக்கம்
விழிப்பின்மை
மரணம் குறித்த பயம்
பேச்சில் தெளிவின்மை
வயிற்றுப்போக்கு
குமட்டல் அல்லது வாந்தி
கடுமையான தசை வலி மற்றும் உடலில் அசௌகரியம்
சரிவர சிறுநீர் கழிக்க முடியாமை
வெளிரிய சருமம்
உணர்விழப்பு

சிகிச்சை:

அவசர சிகிச்சைக்கு பாக்டீரியாக்களை அழிக்கும் நுண்ணுயிர் எதிர்ப்பு ஆன்டிபயாட்டிக் கொடுத்தல்

எந்தவகையான நோய்த்தொற்று என்பதை சோதனை மூலம் கண்டறிந்து சிகிச்சை கொடுக்கவேண்டும். சோதனை முடிவுகளை வைத்துத்தான் சரியான சிகிச்சை கொடுக்கமுடியும்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com