“இபாஸ்க்கு லஞ்சம் பெறும் அரசு அதிகாரிகள் ரத்ததாகம் கொண்ட ஓநாய்கள்” - சென்னை உயர்நீதிமன்றம்

“இபாஸ்க்கு லஞ்சம் பெறும் அரசு அதிகாரிகள் ரத்ததாகம் கொண்ட ஓநாய்கள்” - சென்னை உயர்நீதிமன்றம்
“இபாஸ்க்கு லஞ்சம் பெறும் அரசு அதிகாரிகள் ரத்ததாகம் கொண்ட ஓநாய்கள்” - சென்னை உயர்நீதிமன்றம்

இபாஸ் வழங்க லஞ்சம் பெறும் அதிகாரிகள் மீது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நூற்பாலையில் சட்டவிரோதமாக பணியமர்த்தப்பட்டுள்ள திருவண்ணாமலையைச் சேர்ந்த 8 முதல் 12-ம் வகுப்பு மாணவிகளை மீட்கக்கோரி, திருவண்ணாமலையைச் சேர்ந்த தமிழ் தேசிய மக்கள் கட்சி தலைவர் சி.எம்.சிவபாபு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நூற்பாலைகளில் இருந்து மீட்கப்பட்ட மாணவிகளை குழந்தைகள் நலக் குழுக்கள் மூலம் அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

மேலும், திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளில் குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுகின்றனரா என கண்காணிக்க திடீர் சோதனைகள் நடத்த காவல்துறை, தொழிலாளர் நலத்துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் நலக்குழுக்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அப்போது கொரோனா காலத்திலும், ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் போல செயல்படும் ஊழல் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது அவசியம் என தெரிவித்த நீதிபதிகள், இபாஸ் வழங்க லஞ்சம் பெரும் அதிகாரிகள் மீது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுறுத்தினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com