Published : 26,Jun 2017 03:25 PM

மருத்துவ சேர்க்கையால் தமிழக மாணவர்களுக்கு பாதிப்பில்லை: விஜயபாஸ்கர்

Tamil-Nadu-students-will-not-have-problem-in-medical-seats

மருத்துவ சேர்க்ககையால் தமிழக மாணவர்களுக்கு பாதிப்பு இல்லை என மருத்துவ சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

தமிழக சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது, அரசு மருத்துவ கல்லூரிகளை பொறுத்தவரை 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீடு வழங்கப்பட்டது போக மீதமுள்ள 85 சதவீத இடங்களுக்கு மாநில கலந்தாய்வு நடைபெறும். குறிப்பாக தமிழகத்தில் 22 அரசு மருத்துவ கல்லூரி மற்றும் சிதம்பரத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியையும் சேர்த்து மொத்தம் 3,050 இடங்கள் உள்ளன. அதில் அகில இந்திய ஒதுக்கிட்டு இடங்கள் 456 ஆகும். மீதமுள்ள 2594 இடங்கள் தற்போது வெளியிட்டுள்ள அரசாணைப்படி 85 சதவீத இடங்கள் தமிழக சட்ட முன் வடிவுக்கு ஒப்புதல் கலந்தாய்வு தொடங்கும் நாள் வரை கிடைக்காவிட்டால் நீட் மதிப்பெண் அடிப்படையில் மாநில தேர்வு வாரியத்தில் படித்த மாணவர்களுக்கு ஒதுக்கப்படும். இந்த ஒதுக்கீட்டில் அரசு மருத்துவ கல்லூரிகள் 2094 இடங்களும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியில் உள்ள 150 இடங்களையும் சேர்த்து 2203 இடங்களும் அடங்கும்.

மீதமுள்ள 15 சதவீத 391 இடங்கள் சி.பி.எஸ்.இ, ஐ.சி.எஸ்.இ, பிற தேர்வு வாரியத்தில் படித்த மாணவர்களுக்கு ஒதுக்கப்படும். சுயநிதி மருத்துவ கல்லூரியை பொறுத்தவரை மாநில அரசால் ஒப்புதல் பெற்ற 10 கல்லூரிகளில் உள்ள 783 இடங்களில் 667 இடங்கள் மாநில வாரியத்தில் ஒப்படைக்கப்படும். மீதமுள்ள 119 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படும். இதனால் மாநில பாடத்திட்டத்தில் படித்த தமிழக மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது. மருத்துவ மாணவர்கள் சேர்க்கை குறித்து அரசு எடுத்துள்ள முடிவிற்கு சட்டரீதியான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அனைத்து தரப்பு பெற்றோர்களும் தமிழக அரசின் முடிவிற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்