Published : 26,Jun 2017 01:33 PM

சுரங்கப்பாதை பணிகளை 3 நாட்களுக்குள் முடிக்க வேண்டும்: பேனர் வைத்த ஆளுங்கட்சி எம்எல்ஏ

MLA-keeps-banner-for-completing-underground-works-in-3-days-in-Tirupur

திருப்பூர் ரயில்வே சுரங்கப்‌பாதை பணிகளை 3 நாட்களுக்குள் முடிக்காவிட்டால் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என ஆளுங்கட்சிஉறுப்பினரே தெரிவித்திருப்பது பரபர‌ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பூர்- ஊத்துக்குளி சாலையிலுள்ள சுரங்கப்பாலத்தை அமைக்கும் பணி 4 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வருவதால், வி‌ரைவில் திறக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர்.‌ இந்நிலையில், பணிகளை 3 நாட்களுக்குள் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரவில்லை என்றால் தனது தலைமையில் திறப்பு விழா நடைபெறும் என்று திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ குணசேகரன் விளம்பரப் பலகை வைத்துள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்