Published : 07,Aug 2020 06:48 PM

ஒவ்வொரு வீரருக்கும் இரண்டு முறை கொரோனா சோதனை - முனைப்பில் ஐபிஎல் அணி நிர்வாகங்கள்!

IPL-teams-making-arrangements-for-players-to-undergo-corona-testing

வரும் செப்டம்பர் 19 முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் 2020க்கான ஐ.பி.எல் தொடர் ஆரம்பமாக உள்ள நிலையில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பி.சி.சி.ஐ நேற்று முன்தினம் ஐ.பி.எல் அணிகளின் உரிமையாளர்களுக்கு 53 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ள தொடரின் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை விளக்கியுள்ளது.

image

விளையாட்டு வீரர்கள், வீரர்களின் குடும்பத்தினர், ஊழியர்கள், உரிமையாளர்கள் மற்றும் அணி நிர்வாகிகள் என அனைவரும் அவசியம் கொரோனா பரிசோதனை செய்து கொண்ட பின்னர் அதன் முடிவுகளை பொறுத்தே தொடரில் பங்கேற்க முடியும் என தெரிவித்துள்ளது பி.சி.சி.ஐ.

இந்நிலையில் ஐ.பி.எல் அணியின் உரிமையாளர்கள் தங்கள் அணி வீரர்களை தனிமைப்படுத்தவும், அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளையும் செய்ய தொடங்கியுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளன.

குறிப்பாக இந்தியாவிலிருந்து ஐக்கிய அமீரகத்திற்கு புறப்படுவதற்கு முன்னர் ஒவ்வொரு அணியின் வீரர்களும் இரண்டு முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தது பி.சி.சி.ஐ. 

image

ஆனால் இந்த விஷயத்தில் கூடுதல் அக்கறை எடுத்து கொண்ட அணி உரிமையாளர்கள் தங்கள் அணி வீரர்கள்  மற்றும் ஊழியர்கள் என அனைவருக்கும் குறைந்தபட்சம் நான்கு முறை பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாக பி.டி.ஐ செய்தி நிறுவனத்திற்கு அணி நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதியன்று அமீரகம் புறப்பட உள்ளதாகவும், மும்பை இந்தியன்ஸ் அணி தங்கள் வீரர்களை தனிமைப்படுத்தியுள்ளதாகவும் பி.டி.ஐ தெரிவித்துள்ளது.

image

ஒவ்வொரு அணியிலும் மொத்தமாக 24 வீரர்கள் இடம் பெற்றிருக்கலாம் என பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது. அதோடு போட்டிகள் ஆரம்பமான நாள் முதல் அனைத்து வீரர்களுக்கும் ஐந்து நாட்களுக்கு ஒரு முறை அவசியம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமெனவும் பி.சி.சி.ஐ உத்தரவிட்டுள்ளது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்