கன்னியாகுமரியில் கொரோனா நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மூலிகை கலந்த உயர்ரக மீன் குழம்பு பரிமாறப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் மூலிகை பிரியாணி வழங்கப்படுகிறது.
இந்த வரிசையில் மருத்துவமனையில் உள்ள சுமார் 650 கொரோனா நோயாளிகளுக்கு மூலிகை கலந்த உயர் ரக மீன் குழம்பு சாப்பாடு விநியோகம் செய்யப்படுகிறது.
மஞ்சள், இஞ்சி, பூண்டு, மிளகு, மல்லி, சீரகம், வெந்தயம் உள்ளிட்டவற்றுடன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மூலிகைகள் கலந்து மீன் குழம்பு தயாரிக்கப்படுகிறது. இதற்காக சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து உயர் ரக மீன்கள் கொண்டு வரப்படுகின்றன. இவ்வாறு தயாரிக்கப்பட்ட மீன் குழம்பு கொரோனா நோயாளிகளுக்கு விநியோகிக்கும் பணியை தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்துள்ளார்.
உணவு பாதுகாப்புத் துறை ஆய்வுக்குப் பின் உணவு விநியோகம் நடக்கிறது. அதிமுக சார்பில் ஏற்கனவே மூலிகை பிரியாணி விநியோகம் நடக்கிறது. தற்போது உயர் ரக மீன் குழம்பு வாரத்தில் ஒரு நாள் பரிமாறப்பட உள்ளதாக தளவாய்சுந்தரம் தெரிவித்துள்ளார்.
Loading More post
ராக்கெட்டுகளை ஏவுவதற்கு குலசேகரப்பட்டினத்தை தேர்வு செய்தது ஏன்?-இஸ்ரோ விஞ்ஞானி புதிய தகவல்
’குழந்தைகள் மார்க் விஷயத்தில் பெற்றோர்கள் இதை மட்டும் செய்யாதீங்க’- அமைச்சர் அன்பில் மகேஷ்
காலிப் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்கால தடை! - நீதிமன்றம்
தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக தமிழகத்தைச் சேர்ந்த காவல் அதிகாரி ராஜன் நியமனம்!
கணவர் மரணம் குறித்து தவறான தகவலை பரப்பாதீங்க! - நடிகை மீனா வேண்டுகோள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்