தனுஷும், செளந்தர்யாவும் ஏமாற்றி விட்டார்கள் ... கஜோல் ஓபன் டாக்!

தனுஷும், செளந்தர்யாவும் ஏமாற்றி விட்டார்கள் ... கஜோல் ஓபன் டாக்!
தனுஷும், செளந்தர்யாவும் ஏமாற்றி விட்டார்கள் ... கஜோல் ஓபன் டாக்!

மின்சாரக் கனவு படத்தில் நடித்திருந்த கஜோல், நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் நடித்திருக்கும் படம் விஐபி-2.  செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய கஜோல், ‘ படத்தில் நடிக்க என்னை அணுகி தனுஷும், செளந்தர்யாவும் மும்பை வந்தனர். அப்போது மொழி பிரச்னை இருப்பதால் தயங்கினேன். சிறு சிறு டயலாக்குகள் மட்டும் தான் இருக்கும் என நம்பிக்கை அளித்தனர். அதன்படி சம்மதித்தேன்.  ஆனால். முதல் நாள் படப்பிடில் இரண்டு பக்க நீளமுள்ள டயலாக்கை கொடுத்து என்னை ஏமாற்றி விட்டனர். தமிழ் தெரியாததால் எனக்கு பதற்றமாகி விட்டது. இதனைத் தொடர்ந்து அடுத்த நாள் டயலாக்கை ரூமிற்கு சென்று முதல்நாள் இரவே வரிவரியாக மனப்பாடம் செய்ய ஆரம்பித்து விடுவேன். அதெல்லாம் பள்ளியில் படிக்கும் மாணவியைப்போல உணர வைத்தது. அடுத்தடுத்து டயலாக்கை எளிதாக பேச தனுஷும், செளந்தர்யாவும் உதவினர் ‘ எனக்கூறும் கஜோல் இப்படத்தில் வசுந்தரா கேரக்டரில் நடித்துள்ளார். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com