மதுரை தேனி மெயின் ரோட்டில் உள்ள தனியார் மரக்கடைத் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
மதுரை எஸ் எஸ் காலனியைச் சேர்ந்த சேதுராமன் என்பவருக்கு சொந்தமான மரத்திலாலான பர்னிச்சர் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று அதிகாலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுரை நகர் வெங்கடேசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் 35 பேர் மூன்று வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் மூன்றரை மணி நேரம் போராட்டத்திற்கு பின் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. தீ விபத்தில் சுமார் 30 லட்ச ரூபாய் மதிப்பிலான மர பர்னிச்சர் பொருட்கள் தீயில் கருகி சேதமானது. இச் சம்பவம் குறித்து மதுரை எஸ் எஸ் காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது என்பதி முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Loading More post
'உன்னை நீ நம்பினால்' - தினேஷ் கார்த்திக் உற்சாக ட்வீட்
ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி: அமெரிக்க அதிபருடன் முக்கிய ஆலோசனை
கோலாகலமாக நடைபெற்றது தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசம்
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்