[X] Close

குட்டி ஏர்கிராஃப்ட்டை கவனமாக தரையிறக்கிய அஜித்... கொண்டாடும் ரசிகர்கள் - வீடியோ!

சினிமா

Ajith-fixing-an-aircraft-video-goes-viral-in-social-media

அஜித்குமாருக்கு நடிப்பையும் தாண்டி டிரோன், குட்டி ஏர்கிராஃப்ட் தொழில்நுட்பத்தில்  ஆர்வம் உண்டு. பைக் ரேஸூம் அவரது விருப்பப் பட்டியலில் உண்டு. இந்த ஊரடங்கு நேரத்தில் அஜித் கவனத்துடன் செயல்பட்டு ரிமோட் மூலம் இயக்கப்படும் குட்டி ஏர்கிராப்ட் தரையிறக்கும் வீடியோ காட்சி தற்போது வரவேற்பைப் பெற்றுள்ளது.

அந்த வீடியோவில், ரிமோட் மூலம் இயக்கப்படும் ஏர்கிராப்ட் ஒன்று உடனே தரையிறங்கும் இடத்தை விட்டு விலகிச்சென்றது. அதில் கூடுதல் பொறுப்புடன் செயல்பட்ட அஜித், அதை சரியாக தரையிறக்குவதில் வெற்றிகண்டார். அந்த வீடியோ சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. 

image


Advertisement

ஏற்கெனவே மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி நிறுவனத்தின் தக்சா குழுவினருக்கு வழிகாட்டிவருகிறார். அவர்களுடன் சேர்ந்த உருவாக்கிய டிரோன்கள் விருதுகளை வென்றுள்ளன. ஊரடங்கு காலத்தில் கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அவை கிருமி நாசி தெளிக்கவும், கட்டுப்பாட்டு விதிகளையும் அறிவிக்கவும் பயன்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது

 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close