புஸ்வானமாகி விடுவார் ரஜினி... சீமான்

புஸ்வானமாகி விடுவார் ரஜினி... சீமான்
புஸ்வானமாகி விடுவார் ரஜினி... சீமான்

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் வெடிக்காத தீபாவளி பட்டாசு போலேவே இருப்பார் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். 

கடந்த மாதம் ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினி, அரசியலில் சிஸ்டம் சரியில்லை என கூறியிருந்தார். ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்றும் அவரது ரசிகர்கள் விரும்புகின்றனர். ஆனால் ரஜினி மராட்டியர் என்றும் கன்னடர் என்றும் தமிழகத்தில் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தை தமிழர்தான் ஆளவேண்டும் எனவும் பல அரசியல் கட்சியனரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து ரஜினி மீண்டும் ரசிகர்களை சந்திக்கப் போவதாகவும், அவர் அரசியலில் களமிறங்க போவதாகவும் அண்மையில் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் புஷ்வாணமாகி விடுவார் என விமர்சித்துள்ளார். காமராஜர், கக்கன் போன்ற ஆட்சியாளர்கள் தான் தமிழக மக்களுக்கு தற்போது தேவை என்றும் சீமான் கூறினார்.  

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com