Published : 06,Aug 2020 03:14 PM

“ஐக்கிய அமீரகத்தின் வானிலை அனைவருக்குமே சவால் நிறைந்த ஒன்று”-சுரேஷ் ரெய்னா

The-climate-of-the-UAE-will-be-challenging-for-alL-SAYS-Suresh-Raina

நடப்பு சீசனுக்கான ஐ.பி.எல் தொடர் அடுத்த சில நாட்களில் ஐக்கிய அமீரகத்தில் ஆரம்பமாகவுள்ளது. கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒவ்வொரு அணியின் வீரர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. வீரர்கள் எல்லாம் எதிர் வரும் சீசனுக்காக தீவிர பயிற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

image

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான சுரேஷ் ரெய்னா ஐக்கிய அமீரகத்தின் தட்ப வெட்ப சூழல் அனைவருக்கும் சவால் நிறைந்ததாக இருக்கும் என தெரிவித்துள்ளார். 

அண்மையில் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருந்தார் அவர்.

image

‘அங்கு நிலவும் தட்ப வெட்ப சூழலில் கிரிக்கெட் விளையாடுவதென்பது பெரும் சவாலாக இருக்கலாம். வெப்பமான வானிலையில் ஆடுகளத்தின் தன்மை எப்படி இருக்கிறது என்பதையும் பார்க்க வேண்டியுள்ளது. ஆனால் இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் நீண்ட  தூரம் பயணம் மேற்கொள்ள வேண்டியதில்லை. அதன் மூலம் ஒவ்வொரு போட்டியையும் எதிர்கொள்ள வியூகங்களை வகுக்க போதுமான நேரம் இருக்கும் என நம்புகிறேன்’ என தெரிவித்துள்ளார் சென்னை அணியின் சின்ன தல.

 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்