
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்கள் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், வெள்ளத்தில் சிக்கிய இரண்டு நபர்களை தீயணைப்புத்துறையினர் மீட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வானப் பகுதிகளில் வசித்து வரும் வெள்ளத்தில் சிக்கித்தவித்து வருகின்றனர். அவர்களை மீட்க மாவட்ட நிர்வாகம் முழு வீச்சில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் புறமணவயல் பழங்குடியின கிராம பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி கொண்ட இரண்டு பழங்குடியினர்களை தீயணைப்பு துறையினர் கயிறு மூலம் மீட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.