Published : 05,Aug 2020 09:06 PM

நீங்கதான் சுஷாந்தை கொன்றீர்கள் என மிரட்டுகிறார்கள்-உடலை ஏற்றிசென்ற ஆம்புலன்ஸ்டிரைவர் வேதனை

Sushant-Singh-Case---I-Get-Threat-Calls-Daily---Says-Ambulance-Driver

சுஷாந்தின் ரசிகர்களிடமிருந்து ஒவ்வொரு நாளும் 300 க்கும் மேற்பட்ட மிரட்டல் போன் அழைப்புகள் வருவதாக கூறுகிறார், அவரது உடலை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் டிரைவர்.

image

 

அக்‌ஷய் மற்றும் விஷால் சகோதரர்கள் நகரின் பல்வேறு மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்ஸ் சேவையை வழங்குகிறார்கள். இவர்கள்தான் சுஷாந்தின் உடலை மருத்துவமனைக்கு கொண்டு சென்றவர்கள். இதனால் தங்களுக்கு கடந்த ஒரு மாதமாக அச்சுறுத்தல் அழைப்புகள் வருவதாக விஷால் கூறுகிறார் " சுஷாந்தை ஆம்புலன்சில் கொண்டு ஏற்றியபோது அவர் உயிருடன் இருந்தார் என்றும் நாங்கள்தான் அவரை கழுத்தை நெரித்துக் கொன்றோம் என்றும் அவரின் ரசிகர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். நீங்களும் கொல்லப்படுவீர்கள், கடவுள் உங்களைத் தண்டிப்பார் என்று அவர்கள் தொலைபேசியில் எங்களிடம் கூறுகிறார்கள்" என்கிறார்

“மருத்துவ சேவைக்காக எங்களின் நான்கு ஆம்புலன்ஸ் மற்றும் நான்கு தொடர்பு எண்கள் காட்டப்பட்டுள்ளன. இந்த ஒவ்வொரு எண்ணிற்கும் தொடர்ந்து அழைப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. நாடு முழுவதிலுமிருந்து அழைப்புகள் வருவதாகத் தெரிகிறது. சில நேரங்களில் சர்வதேச எண்கள் கூட காட்டப்படும். அழைப்பாளர்கள் மிகவும் மோசமான மொழியைப் பயன்படுத்துகிறார்கள்" என்று விஷால் கூறினார்.

 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்