தமிழகத்தில் வாரிசு அரசியல் மாறி குடும்ப அரசியல் நடப்பதாக திமுகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ கு.க.செல்வம் தெரிவித்தார்.
சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் இன்று சென்னை, தி.நகரில் உள்ள தமிழக பாஜக அலுவலகத்திற்கு வருகை தந்தார். அங்கு ராமர் உருவ படத்திற்கு மரியாதை செய்த அவர், பின்னர் விபி துரைசாமி, கரு.நாகராஜன், எம்.என்.ராஜா, கே.டி.ராகவன் உள்ளிட்ட பாஜக மூத்த நிர்வாகிகளுடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “மோடி, ஜே.பி.நட்டா மற்றும் முருகன் ஆகியோருக்கு நன்றி. நான் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் அவர்களிடம் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு மின் தூக்கி கேட்டேன். தமிழகத்தில் வாரிசு அரசியல் நடக்கிறது. திமுக உட்கட்சி தேர்தலை நடத்த வேண்டும். முருகனை பற்றி தவறாக பேசியவர்களை திமுக தலைவர் கண்டிக்க வேண்டும். கட்சியை விட்டு நீக்கினாலும் எனக்கு கவலை இல்லை. தமிழகத்தில் வாரிசு அரசியல் மாறி குடும்ப அரசியல் நடக்கிறது” என்றார்.
திமுகவில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்த விபி துரைசாமி பேசும்போது, “கு.க செல்வம் பாரதிய ஜனதா கட்சியில் இணைய வில்லை. இந்தியாவில் எப்படி பாஜக காங்கிரஸ் குடும்ப கட்சியை எதிர்க்கிறோதோ, அதேபோன்று தமிழகத்தில் திமுக குடும்ப கட்சியை தமிழக பாஜக எதிர்க்கும்” என்றார்.
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!