
ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்ற பலரது கனவு இன்று நிறைவேறியுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டப்பட உள்ளது. இந்த கோயிலுக்கான பூமி பூஜை வைபவம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். அனுமன் கர்கி கோயிலில் அனுமனை தரிசித்த பின், ராமர் கோயில் பூமி பூஜையில் மோடி பங்கேற்றார்.
அதனைத்தொடர்ந்து கோயிலுக்கான செங்கலை எடுத்து வைத்து அடிக்கல் நாட்டினார். பின்னர் உரையாற்றிய மோடி, வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்வில் எனக்கு வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி, ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்ற பலரது கனவு இன்று நிறைவேறியுள்ளது என தெரிவித்துள்ளார்.