Published : 25,Jun 2017 02:28 PM
பிரதமர் மோடியை நெருங்கும் விராத் கோலி

சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் பிரதமர் மோடிக்கு அடுத்தபடியாக அதிகம் பேரால் பின்தொடரப்படும் பிரபலம் என்ற பெருமையை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி பெற்றுள்ளார்.
விராத் கோலியை ஃபேஸ்புக்கில் 3.5 கோடி பேர் பின் தொடருகின்றனர். உலகில் அதிகம் பேர் பின்தொடரும் கிரிக்கெட் வீரராகவும் விராத் கோலி இருக்கிறார். இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் பிரதமர் மோடியை 4.22 கோடி பேர் பின்தொடருகின்றனர். ஃபேஸ்புக்கில் அதிகம் பேர் பின்தொடரும் பிரபலங்கள் பட்டியலில் விராத் கோலிக்கு அடுத்தபடியாக சினிமா துறை பிரபலங்களான நடிகர் சல்மான் கான், பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில், சல்மான் கானை விட விராத் கோலி பின்தொடருபவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்துக்கும் அதிகமாகும். விராத் கோலியை ட்விட்டரில் 16 லட்சம் பேரும், இன்ஸ்டாகிராமில் 14 லட்சம் பேரும் பின்தொடருகின்றனர்.