[X] Close

#TopNews புதிய கல்விக்கொள்கை முதல் ஐபிஎல் கிரிக்கெட் வரை...!

முக்கியச் செய்திகள்

today-healines-in-puthiyathalaimurai

புதிய கல்விக் கொள்கை குறித்து உயர்க் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமையில் இன்று ஆலோசனை. தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்கப்பட வாய்ப்பு.

புதிய கல்விக்கொள்கையை, ஆளும் அதிமுக அரசு நிராகரிக்கவேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல். மக்கள் கருத்தை அறிந்த பின்பே புதுவையில் கொண்டுவரப்படும் என முதல்வர் நாராயணசாமி தகவல்.

எந்தவொரு மாநிலத்தின் மீதும், எந்த மொழியையும் மத்திய அரசு திணிக்காது. மும்மொழிக் கொள்கை பற்றி சர்ச்சை எழுந்த நிலையில் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தமிழில் ட்வீட்.


Advertisement

எந்த மொழியையும் மத்திய அரசு திணிக்காது - புதிய கல்விக்கொள்கை குறித்து மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தமிழில் கருத்து

விண்வெளிக்கு சென்ற இரு வீரர்கள் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினர். பாராசூட் மூலம் கடலில் மெதுவாக இறங்கியது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலன்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா. விரைவில் குணம் பெற தமிழக முதல்வர், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் விருப்பம்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கும் கொரோனா பாதிப்பு. அறிகுறிகள் இல்லாததால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவர்கள் பரிந்துரை.

அடுத்தடுத்து 87 பேருக்கு கொரோனா ...

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கும் உறுதியானது கொரோனா தொற்று. மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்வதாக டுவிட்டரில் அறிவிப்பு.

சென்னையில் பல பகுதிகளில் விடியவிடிய கொட்டிய கனமழை. கோவை, நீலகிரி, சேலம், தருமபுரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் மேலும் 6 பேரை கைது செய்தது என்ஐஏ. கைதானவர்களின் வீடுகள், அலுவலகங்களில் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்.

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக மேலும் 98 உயிரிழப்பு. மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 132 ஆக அதிகரிப்பு.

In Tamil Nadu, the corona effect is close to 20 lakhs and so far ...

பஞ்சாப்பில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்கள் எண்ணிக்கை 104 ஆக உயர்வு. முதலமைச்சர் ராஜினாமா செய்யவும் வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்கவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்.

செப்டம்பர் 19ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் கிரிக்கெட். ஐபிஎல் நிர்வாகக் குழு கூட்டத்தில் அறிவிப்பு.

டிக் டாக்கை வாங்கும் மைக்ரோசாப்ட்டின் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போட்டார் ட்ரம்ப்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close