[X] Close

வதந்திகளால் எனது மகளை வதைக்காதீர்கள்: ஸ்ரீதேவி வேதனை

Dont-hurt-my-daughter-by-gossips---Sridevi

 

மீடியாக்கள் கிளப்பும் கிசுகிசுக்களால் எனது மகளின் சொந்த வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என வேதனைதெரிவித்துள்ளார் ஸ்ரீதேவி. 
19 வயதான தனது மகள் ஜான்வி பகூரை திரைத்துறையில் அறிமுகமாக்கும்  முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் முன்னாள் கனவு கன்னியான ஸ்ரீதேவி. இந்த நிலையில் தனது மகள் ஜான்வி கபூர் ஒரு பார்ட்டியில் நடிகர் ரன்பீகபூரின் பின்னால் அலைந்ததாக கூறப்படுகிறது. 

’பார்ட்டியில் அந்த நடிகரின் பின்னால், என் மகள் அலைந்ததாக கூறப்படும் தகவல் உண்மையானதல்ல. அவர் டைரக்டர் கெளரி ஷிண்டே அருகில் தான் இருந்தேன் என எனது மகள் என்னிடம் கூறினார்.  அவள் இப்போது தான் வளர்ந்து வருகிறாள். வதந்திகள் அவளது எதிர்கால வாழ்க்கையை பாதித்து விடும். இதனால் அவள் கவலையடைந்து இருக்கிறாள். இதுபற்றி அவள் என்னிடம் வருத்தத்துடன் கூறியபோது, ’இந்த உலகம் இப்படித்தான் இருக்கும் மகளே, அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்’ என அவளுக்கு எடுத்துக் கூறினேன்’ என அவர் தெரிவித்தார்.


Advertisement

சமீபத்தில் நடந்த பார்ட்டியில் கலந்து கொண்டார் ஜான்வி கபூர். அப்போது அங்கு வந்த நடிகர் ரன்பீர் கபூர் மீது ஈர்ப்பு ஏற்பட்டு அவர் செல்லும் இடமெல்லாம் ஜான்வி பின் தொடர்ந்து சென்றதாகவும், இதனால் வெறுப்பான ரன்பீர் கபூர், ஜான்வியை கண்டித்ததாகவும் தகவல்கள் வெளியாகின. ’இது போன்ற வதந்திகள் எனது மகளின் எதிர்காலத்தை பாதிக்கும். எனது மகளைப்பற்றி வதந்தி கிளப்புவதை மீடியாக்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். இதுபோன்ற வதந்திகள் அவ்வப்போது வந்து தான் தீரும். அதை எதிர்க்கொள்ளவேண்டும் என எனது மகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறேன்’ என அவர் தெரிவித்தார்.  


Advertisement

Advertisement
[X] Close